பருவ மழை குறைவாக கிடைக்கப் பெற்ற மாநிலங்கள், வறட்சி காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவித்த அவர், வறட்சிப் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து மாநில அரசுகளுடன் விரைவில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார். வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழை மூலம் 75 சதவீத மழையளவு நாட்டிற்கு கிடைக்கும், ஆனால் இந்த ஆண்டு இதுவரை சுமார் 40 சதவீத மழையளவு மட்டுமே கிடைத்திருப்பதாக சரத்பவார் கூறினார்.
தற்போதைய வறட்சியால் அரிசி, தானிய வகைகள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக சரத் பவார் தெரிவித்தார். எனினும் கரும்பு, பருத்தி போன்றவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருப்பதாக கூறினார். வறட்சி அதிகரித்திருந்தாலும், நாட்டின் உணவு தானிய கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பசுமைநாயகன்