டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
கடல் போல் காட்சியளித்த மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதிகள், பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகின்றன.
5 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் தற்போது 50 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது. பண்ணவாடி பகுதியில் நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலய இரட்டை கோபுரங்கள் வெளியே தெரிகின்றன.
அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், சாகுபடிக்கு திறந்துவிடும், தண்ணீரை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு 52.8 டி.எம்.சி காவிரி நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 26ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டி.கே ஜெயின், மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு, இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், இப்பிரச்னைக்கு தமிழக, கர்நாடக மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரு மாநிலங்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இப்பிரச்னையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இரு மாநில முதலமைச்சர்களும் சந்திக்கும்போது நிபுணர்களையும் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, 27ம் தேதி தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத்
சாரங்கி தலைமையில் அதிகாரிகள் மட்ட ஆலோசனை சென்னை தலைமைச்செயலகத்தில்
நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடகா முதலமைச்சரிடம்
பேசவேண்டியவை முடிவு செய்யப்பட்டவுடன் 29ந்தேதி , அதிகாரிகளுடன்
முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களுரு புறப்பட்டு சென்றார்.
அங்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மாலை 3 மணி அளவில் தமிழக கர்நாடக
முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. கிட்டதட்ட 40 நிமிட நேரம் நீடித்த
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை முதலமைச்சர் ஜெயலலிதா
சந்தித்தார்.
அப்போது, சம்பா பயிரை காப்பாற்ற 30 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும் என்று
கர்நாடகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், அந்த தண்ணீரை 15 நாட்களுக்கு
தரவேண்டும் என்றும், உடனடியாக தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும்
கேட்டதாக தெரிவித்தார். ஆனால் இத்தனை பேச்சுக்கு பிறகும், கோரிக்கைகளுக்கு
பிறகும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர
மறுத்துவிட்டது என்று ஜெயலலிதா கூறினார்.
பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து சென்னை திரும்பியபோதும் முதலமைச்சர்
ஜெயலலிதா விளக்கினார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், கர்நாடக
முதலமைச்சர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், 30 டிஎம்சி
தண்ணீரை தர முடியாது என்றால், அதற்கு பதிலாக எவ்வளவு டிஎம்சி தண்ணீரை தர
முடியும் என்று கேட்டதற்கு, அதற்கும் முந்தைய பதிலையேதான் அவர்கள்
கூறியதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ்
ஷெட்டர், 3 அம்ச தி்ட்டம் ஒன்றை தெரிவித்தார். அதன்படி, 4 அல்லது 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைதூக்கும் இந்த பிரச்னையை தீர்க்க கர்நாடகாவில்
உள்ள சிவசமுத்திரம் மற்றும் மேட்டூர் அணைகளை அடுத்து புதிய
நீர்த்தேக்கங்களை கட்டிக் கொள்ளலாம் என ஷெட்டர் கூறினார். இரு
மாநிலங்களையும் சேர்ந்த மத்தியஸ்த வல்லுனர் குழுவை அமைத்து பேசித் தீர்வு
காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கர்நாடகத்தின் குடிநீர் தேவை, பாசனத் தேவை மற்றும் வறட்சி
போன்றவை குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் விளக்கியதாகவும்,
தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில்
உள்ளதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே,
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே.ஜெயின், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன் காவிரி விவகார வழக்கு வெள்ளிக்கிழமை (30-11-2012) விசாரணைக்கு
வந்தது. அப்போது, பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த
முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
வைத்தியநாதன் வாதிட்டார்.
தமிழகத்தில் சம்பா பயிர்களை காப்பாற்ற 39 டிஎம்சி தண்ணீர்
தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை
குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் அளிக்க வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார். அதே நேரத்தில், தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக
கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
தேவை குறித்து அறிக்கை
இதையடுத்து, வழக்கு விசாரணையை (03-12-2012)திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த
நீதிபதிகள், தமிழக அரசும், கர்நாடக அரசும், தங்களுக்கான தண்ணீர் தேவை
குறித்து சனிக்கிழமை (01-12-2012) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென
உத்தரவிட்டனர். இதன்படி, இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்தன.
தண்ணீர் தேவை குறித்து தமிழக அரசு 122 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற குறைந்த பட்சம் 30 டிஎம்.சி தண்ணீரை வரும் 15 நாட்களுக்குள் திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா அரசு அந்த மாநிலத்திற்கான தண்ணீர் தேவையை உயர்த்திக் கூறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 5 தினங்களுக்கு மட்டுமே தண்ணீர்
திறக்கக்கூடிய நிலை இருப்பதாகவும் தமிழக அரசின் அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, தண்ணீர் இருப்பு குறித்து கர்நாடகா அரசு 378 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது 37 டிஎம்சி தண்ணீர் இருப்பதாகவும், அதில் கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு 28 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு கொடுப்பதற்கு போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடகா அரசு கூறியுள்ளது.

இந்த வழக்கு வரும் டிசம்பர் 3ந்தேதி (திங்கள் கிழமை) மீண்டும்
விசாரணைக்கு வருகிறது. அப்போது இருமாநில அறிக்கைகள் மீது விசாரணை நடத்தி,
தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறித்து
உச்சநீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும்.
விவசாயிகள் கோரிக்கை
இதனிடையே, கர்நாடக அரசு கை விரித்து விட்டாலும் உச்ச நீதிமன்றம் மீது
நம்பிக்கை இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தற்கு நல்ல தீர்ப்பு
கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் கிடைக்கா விட்டால், தமிழக அரசு சம்பா பயிர்களை
காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் தொடர்ச்சியாக 10 மணி நேரம்
மும்னை மின்சாரம் வழங்கினாலும், மின் மோட்டாரை பயன்படுத்தி சம்பா பயிர்களை
காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வரலாற்றில் சம்பா சாகுபடியை டெல்டா விவசாயிகள் இதுவரை இழந்தது
இல்லை. சம்பா பணிகள் நடைபெறும் காலத்தில் வடகிழக்கு பருவ மழையும் பெய்யும்
என்பதால், பல்வேறு கால கட்டங்களில் மழையி்ன் உதவியுடன் சம்பா பயிர்களை
விவசாயிகள் காப்பாற்றி உள்ளனர்.
இந்த முறையும் பருவ மழை 14 லட்சம் 69 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களை நிச்சயம் காப்பாற்றும் என்றும் விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இந்த முறையும் பருவ மழை 14 லட்சம் 69 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களை நிச்சயம் காப்பாற்றும் என்றும் விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
விவசாயி தற்கொலை
நாகை மாவட்டத்தில் தண்ணீரின்றி நெற்பயிர் கருகுவதைக் கண்டு மன வேதனையடைந்த ராஜாங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சூரத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த அவர், சுமார் 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதாகவும், விவசாயத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுவதாகவும், கடந்த சில நாட்களாக, தமது நண்பர்களிடம் ராஜாங்கம் கூறிவந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை(24-11-2012) இரவு ராஜாங்கம் விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.

போராட்டம் அறிவிப்பு
காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா
பகுதிகளில் வருகின்ற 7ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து பேசிய அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முழு அடைப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

இதே தினத்தில் ரயில் மறியல், பேருந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு கண்டனம்
தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் அவலநிலைக்கு கர்நாடக அரசுதான் முக்கியக்
காரணம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை ஜி.கே. வாசன்
குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கர்நாடக அரசு, ஜனநாயகத்துக்கு எதிரான
போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தார்.
இழப்பீடு வழங்க ஏற்பாடு
தமிழக அரசு உடனடியாக ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்றும், எத்தனை
விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர்
இல்லாமல் கருகி உள்ளது என்பது பற்றி அந்த குழு விரிவாக அறிக்கை தயார் செய்ய
வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி , இந்த
அறிக்கையை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இதை மத்திய
அரசு பரிசீலித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவது
பற்றி முடிவு செய்யும் என்றார்.
-பசுமை நாயகன்