விவசாயத் துறையில் நிலவும் முறையற்ற தொழில் கூட்டால், ஏழை விவசாயிகளும்,
நுகர்வோரும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிசிஐ எனப்படும் இந்திய வர்த்தக போட்டி உறுதி ஆணையத்தின் உறுப்பினரான
கீதா கவுரி இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில்,
விவசாய சந்தை மற்றும் மண்டிகளில் குறிப்பிட்ட சில பிரிவினர் தங்களுக்குள்
கூட்டு வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க முடிவதாக கீதா கவுரி
தெரிவித்துள்ளார்.
’முறையற்ற தொழில் கூட்டால், ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' என்ற
தலைப்பிலான விவாதத்தைத் தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு
கூறியுள்ளார். இந்த விவாதத்தில் பங்கேற்ற தமிழக மாநிலங்களவை உறுப்பினர்
சுதர்சன நாச்சியப்பன், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் குறைந்த
விலைக்கு, தரகர்களுக்கு விற்பதாகவும், அதை தரகர்கள் அதிக விலைக்கு விற்று
கூடுதல் லாபம் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
-பசுமை நாயகன்