விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் வறட்சி இல்லை


     தண்ணீர் தராத கர்நாடக அரசிடம் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர தயாராகும் தமிழக அரசு, மற்றொரு புறம் காவிரி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் வறட்சி இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
    கர்நாடகா தண்ணீர் தர மறுத்ததாலும், பருமழை பொய்த்துப் போனதாலும் டெல்டா மாவட்டங்கள் வறண்டு போயின. இதனால் காவிரி டெல்டாவில் மட்டும், கடந்த சில மாதங்களில் விவசாயிகள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். சம்பா கருகியதாலேயே விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறினர். அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் அளித்த தமிழக அரசு, விவசாயிகளின் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளது.
                                                  -பசுமை நாயகன்