கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்துஅதிகாலை தண்ணீர் வந்தடைந்தது.


     கர்நாடகம் அரசு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் 5 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வந்து சேர்ந்தது.கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு அதிகாலை தண்ணீர் வந்தடைந்தது.
   சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்துசேர்ந்துள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதால் ஆங்காங்கே உள்ள மேடு பள்ளங்கள் நிரம்பி, வறண்ட பூமி உறிஞ்சி மிஞ்சிய தண்ணீர்தான் இப்போது வந்துகொண்டிருக்கிறது.
  இதுவே தண்ணீர் தாமதமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது. வழக்கமாக பிலிகுண்டுலுவில் இருந்து 8 மணிநேரத்தில் தண்ணீர் மேட்டூருக்கு வரும். இந்த முறை தண்ணீரின் அளவு குறைவாலும், வறண்ட நிலை காரணமாகவும் இன்றிரவு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                                                                                                  -பசுமை நாயகன்