கேரள அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


       முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழகத்தின் நலனை பாதிக்கும் வகையில் கேரள அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதத்தில், மக்களின் நலன் கருதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற அரசுக்கு உரிமை உள்ளது என்று கேரளா தெரிவித்தது. அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது சரிதான் என்றும் கூறியது.
    அதே வேளையில் நீர்நிலைகளின் பள்ளத்தாக்கு பகுதிகள் தமிழகத்தில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நாளையும் நடைபெறவுள்ளது.