காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, மதசார்பற்ற ஜனதா தள எம்.பி ஒருவர் மற்றும் நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை, கட்சித் தலைவர் குமாரசாமியிடம் அளித்தனர்.காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜினாமா கடிதங்கள் அளிக்கப்பட்டன.
எனினும், இந்த விவகாரம் குறித்து, நாளை நடக்கும் கட்சியின் நிர்வாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் அகில இந்திய தலைவர் தேவகவுடா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, காவிரி ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்த உள்ளார். இந்நிலையில், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாண்டிய பகுதியில், மைசூர்- ஷிரடி விரைவு ரயிலை மறித்த, நூறு பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, பெங்களூருவில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். -பசுமை நாயகன்.
