விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் பயிர்கள் கருகிவருவதாக வேதனை தெரிவித்த அவர்கள், வயல்களில் கறுப்புக் கொடி நாட்டியுள்ளனர்.
வாடிய பயிரைக் கண்டு தற்கொலை செய்த விவசாயிகளுக்காக, உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடப்போவதில்லை என்றும் விவசாயிகள் கூறினர்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற மத்திய அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
.-பசுமை நாயகன்