கலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை


      பண்டகச் சந்தையில் வணிகம் நடைபெறும் விவசாயப் பொருட்களின் தரம் குறித்து, பண்டகச் சந்தை வழிகாட்டு ஆணையம் சோதனை செய்யவுள்ளதாக தெரிகிறது
கேரளாவில் உள்ள மிளகு சேமிப்பு கிடங்குகளில், கலப்படம் நடப்பதாக கடந்த மாதம் புகார் வந்ததால், இந்த நடவடிக்கையை பண்டகச் சந்தை வழிகாட்டு ஆணையம் எடுக்கவுள்ளது.
கேரளாவில் புகாருக்கு ஆளான மிளகு கிடங்குகளை உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதிரடியாக சோதனையிட்டு சீல் வைத்தது. இதுபோன்ற கலப்பட மோசடிகள், இனி நடப்பதைத் தவிர்க்க, பண்டக சந்தையில் வணிகத்துக்கு வரும் விவசாய பொருட்களின் உணவுப் பாதுகாப்புக்கான தரம்குறித்து முன்கூட்டியே தீவிர சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய விளைபொருட்களுக்கும் உணவு பாதுகாப்பு ஆணையம், இந்தியத் தர நிர்ணயம் மற்றும் அக்மார்க் ஆகிய தர முத்திரைகளை, கட்டாயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக, பண்டகச் சந்தை வழிகாட்டு ஆணைய தலைவர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார். கலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனைக்கு வந்து விடாமல் தடுக்குமாறு, தேசிய பண்டக வணிக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் ரமேஷ் தெரிவித்தார்.
                                                       -பசுமை நாயகன்