கர்நாடகாவில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு


     காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடபட்டதை கண்டித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கிருஷ்ணசாகர் அணையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
   தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து, விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, முக்கிய அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
   மாண்டியாவில் கிருஷ்ணாசாகர் அணையை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அங்கு 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல் படுத்தப்பட்டுள்ளது.
   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை ஓரிரு நாட்களில் சந்திக்க இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.
  இதனிடையே, நீதிமன்ற உத்தரவையேற்று, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ள போதிலும், அதனை எதிர்த்து நாளை மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
                                                                          -பசுமை நாயகன்