இன்று கடக்கிறது முர்ஜான் புயல் : புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை

   தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்ட முர்ஜான் புயல், இன்று சோமாலியா கடல் பகுதியில் கரையை கடக்கிறது. அதேநேரத்தில், அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றுத் தாழ்வு நிலையால், வரும் 29ம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முர்ஜான் புயல் இன்று காலை சோமாலியாவில் கரையை கடப்பதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதியில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக, வரும் 29ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை  தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்.
                                                                             
                                                                                        -பசுமை நாயகன்.