முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – கேரள அதிகாரிகள் டெல்லி பயணம்

     முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த கேரளாவின் அணைகள் பாதுகாப்புக் குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை குறித்து , வல்லுநர் குழுக்கள் நடத்திய 13 ஆய்வறிக்கைகளை  நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆய்வறிக்கை மீதான இறுதி விவாதம் வரும் நவம்பர் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவாதத்தில் கேரள அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த கேரள அணைகள் பாதுகாப்புக்குழு தலைவர்  பரமேஸ்வரன் தலைமையிலான  அதிகாரிகள் குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.