தமிழகத்திற்கு 2 புள்ளி 4 டிஎம்சி தண்ணீர் உச்சநீதிமன்றம் உத்தரவு

பெப்ரவரி 08, 2013 


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துள்ளது.
பெங்களூருவில் முதலைமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, எதிர்கட்சி தலைவர் சித்ராமையா , கர்நாடக மாநில உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் குடி நீர் தட்டுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்திற்கு 2. 44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நிதிமன்றத்தின் உத்தரவிற்கு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்திற்கு 2 புள்ளி 4 நான்கு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக அந்த மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரும், மாநில நீர் பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் டெல்லி சென்றுள்ளனர்.
  உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்குகளை கவனிக்கும் கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமனுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்வது குறித்தும், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
  தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், 2 புள்ளி 4 நான்கு டிஎம்சி தண்ணீரைக் கூட தமிழகத்திற்கு தர கர்நாடக அரசு தயாராக இல்லை என கூறப்படுகிறது.

                                                -பசுமை நாயகன்