தண்ணீர் அளவு குறித்து ஆய்வு செய்த மத்தியக்குழுவினர்






  காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் அளவு குறித்து ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
 காவிரி நடுமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த   நீதிமன்றம், தமிழக டெல்டா பகுதிகளில் விவசாயத்தின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய குழுவுக்கு உத்தரவிட்டது.
 அதன்படி, மத்திய பயிர் பாதுகாப்பு ஆணையர் பி.கே.ஷா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆய்வு நடத்தியது.
  திருச்சி, திருவாரூர், மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்த இந்த குழுவினர், மீனம்ப நல்லூர், பெரிஞ்சி மூலை, கருங்கண்ணி ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்களையும், அதற்குத் தேவைப்படும் நீரின் அளவு குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
  பின்னர், அந்த குழுவினர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இந்த குழுவின் அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

                                                       -பசுமை நாயகன்